search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காரைக்குடி: சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    காரைக்குடி: சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • சிவகங்கையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டார்.
    • அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .

    கடந்த ஆண்டு நவம்பவர் கோவையில் முதலாவது கள ஆய்வை தொடங்கிய முதல்வர், அடுத்ததாக விருதுநகர், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அவ்வகையில் சிவகங்கையில் இன்று முதல்வர் களஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தாரால் ரூ.12 கோடி நிதியில் 30,450 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து காரைக்குடியில் சாலையில் ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் பலரும் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×