என் மலர்
தமிழ்நாடு

X
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு- விசாரணை அதிகாரிகள் மாற்றம்
By
மாலை மலர்3 March 2025 9:17 PM IST

- தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
- அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை சிபிஐயிடம் இருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, வழக்கு விசாரணை தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கோரிக்கை வைத்தது.
அதன்படி, அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதன்படி, ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் திருச்சி டிஐஜி, தஞ்சை எஸ்பி ஆகியோரை கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
X