search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை- மு.க.ஸ்டாலின்
    X

    நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை- மு.க.ஸ்டாலின்

    • பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.
    • இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு

    சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. நல்லகண்ணுக்கு பழ.நெடுமாறன் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * ஐயா நல்லகண்ணுவிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளோம்.

    * தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய வாழ்த்து இல்லை.

    * பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.

    * பொதுவுடைமை, திராவிடம், தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் நிறைந்த மேடை இது.

    * தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய ஊக்கம் எதுவும் இல்லை.

    * 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் நல்லகண்ணு.

    * கட்சிக்காகவே உழைத்தார். உழைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு

    * கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினேன். நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை என்று கூறினார்.

    Next Story
    ×