என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் நயினார் நாகேந்திரன் - அ.தி.மு.க. முதல் பா.ஜ.க. வரை...
- 2011 தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2017 இல் அதிரடியாக பாஜகவில் இணைந்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். 2001 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001-2006 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். 2011 தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன் 2017 இல் அதிரடியாக பாஜகவில் இணைந்தார். பின்னர் 2019 இல் நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நாகேந்திரன் படுதோல்வியை சந்தித்தார்.
தொடர்ந்து 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலல் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார். பின் 2023 மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியை சந்தித்தார்.
தற்போதைய மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் பாஜக நயினார் நாகேந்திரன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். பாஜக கட்சி விதிகளின்படி 10 ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்கள்தான் மாநில தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமே என்று கூறப்பட்டது.
அப்படிப் பார்த்தால் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதற்கு 6 மாதங்கள் முன்னர்தான் அவர் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்.
இதை வைத்துப் பார்த்தால் நயினார் நாகேந்திரன் அண்ணாமலையை விட சீனியர் என்ற நோக்கத்திலும் அதிமுக-பாஜக இரண்டிலுமே இருந்தவர் என்ற அடிப்படையிலும் அதிமுகவை திருப்திப்படுத்த பாஜக தலைமை நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவர் ஆக்கியிருக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.






