search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
    X

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

    • பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது
    • பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

    2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×