என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - நாளை த.வெ.க போராட்டம்
    X

    வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - நாளை த.வெ.க போராட்டம்

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு.

    மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.

    மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (ஏப்ரல் 4) போராட்டம் நடத்துமாறு நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் உத்தரவு என தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×