என் மலர்
தமிழ்நாடு
பெட்ரோல் குண்டு வீச்சு- தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை
- உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
- காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஹரி என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது குற்றவாளி ஹரி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.