என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் மோசமான காற்றின் தரம்- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
- சென்னையில் காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.
- காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இதனால், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பனிக்காலம் தொடங்கிய நிலையில் வானிலை காணப்படுகிறது.
இதனால், காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்றைய காற்றின் தரம் மோசடைந்து இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது
அதாவது, சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39ல் இருந்து 142 ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மணலியில் காற்று தரக்குறியீடு 238 ஆக உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அபிராமிபுரத்தில் 193 புள்ளிகள், அச்சுதன் நகரில் 151 புள்ளிகள், அந்தோணி பிள்ளை நகரில் 201 புள்ளிகள், அரும்பாக்கத்தில் 181 புள்ளிகள், காந்திநகர் எண்ணூரில் 116 புள்ளிகள், ஐஎன்டியுசி நகரில் 177 புள்ளிகள், கொடுங்கையூரில் 221 புள்ளிகள், கொரட்டூரில் 152 புள்ளிகள், குமாரசாமி நகரில் 187 புள்ளிகள், ராயபுரத்தில் 205 புள்ளிகள், பெருங்குடிகள் 187 புள்ளிகள், பொத்தேரியில் 167 புள்ளிகள், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 164 புள்ளிகள் என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்து இருக்கிறது.