என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![த.வெ.க. நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை த.வெ.க. நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9186688-prashantkishore.webp)
த.வெ.க. நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
- நேற்றைய சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதையடுத்து கட்சி பணிகளில் தீவிர காட்டிவந்த விஜய் தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பணிகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் 2-ம் நாளாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே திமுகவுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து திமுகவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.