என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்கள்
- தமிழகத்தில் வரும் 12-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
- தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை:
தென் வங்கக்கடல் பகுதியில் நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இதனால் தமிழகத்தில் வரும் 12-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






