என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் தொடங்கிய மாமன்னன் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா
- ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார்.
இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற்றது.
இதையடுத்து தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.
விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு அரண்மனை பரம்பரை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், பேராசிரியர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழநி ஆதீனம் குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வரலாறாக வாழும் மாமன்னன் ராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதையடுத்து பிற்பகலில் நாதசுரம், பரதநாட்டியம், யாழ் இசை, வில்லுப்பாட்டு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு கயிலை மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை புத்தாடைகள் வழங்குகிறார். காலை 7.20 மணிக்கு அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும். காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. மதியம் 1.30 மணியளவில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும்.
தொடர்ந்து 1039 கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்