என் மலர்
தமிழ்நாடு
தைலாபுரத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ்
- பாமக இளைஞர் சங்கத் தலைவராக பரசுராமன் முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
- இது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருது முரண்பாடு எழுந்தது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை நியமனம் செய்தது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
தமிழர் திருநாளான, பொங்கல் திருநாளை தைலாபுரம் தோட்டத்தில் குடும்பத்தோடு கொண்டாடிய போது.! pic.twitter.com/ASrgVPY4lN
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 14, 2025