search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்- அமைச்சர்  வழங்கினார்
    X

    கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்- அமைச்சர் வழங்கினார்

    • அரசு சார்பில் ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • முரசொலி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியை ரமணி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மதன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ரமணியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று முதலமைச்சர் உத்தரவுப்படி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரமணியின் பெற்றோரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.

    அப்போது முரசொலி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×