என் மலர்
தமிழ்நாடு
சீமான், பிரபாகரன் புகைப்பட சர்ச்சை - பேசுபொருளான நடிகர் ராஜ் கிரண் பதிவு
- பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது
- 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது என சீமான் பதில்
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேசிய சீமான், "பெரியாரைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது. இப்போது எடிட் செய்து கொடுத்ததாக சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா என சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பினார்.
சீமான் - பிரபாகரன் புகைப்பட சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடிகர் ராஜ் கிரண் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது பதிவில், "நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம்.
இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள். என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு" என்று தெரிவித்துள்ளார்.