என் மலர்
தமிழ்நாடு
வெள்ளி விழா கொண்டாட்டம்- சென்னையில் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
- திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் நிகழ்ச்சிகளைச் சென்னையில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.