என் மலர்
தமிழ்நாடு
பாதுகாப்பு குறைபாடு.. அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை மாற்ற தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்
- மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது, பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பாகவும் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 25 மாணவர்களின் கருத்துகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டறிந்துள்ளார்.
பல்கலை மாணவர்களின் பாதுகாப்பு, காவலர்களின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்.
உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் உள்ளிட்டோர் ஆளுநருடன் இருந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரை மாற்றுமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிவாளரை மாற்றுவது தொடர்பான முடிவு மாநில அரசுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.