search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் காவல்துறை தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு - வழக்கறிஞர் பாலு
    X

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் காவல்துறை தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு - வழக்கறிஞர் பாலு

    • காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.
    • கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.

    மேலும் நீதிபதிகள் அளித்த உத்தரவு தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். தமிழக காவல்துறையின் தலையீடு இருக்கக்கூடாது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கவும் இவ்வழக்கில் தமிழக காவல்துறையினர் எவரும் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மூடிமறைக்க முயன்ற தமிழக அரசின் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×