search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026-ல் தமிழ்நாட்டில் அமையும் கூட்டணி ஆட்சியில் பா.ம.க.வும் இடம்பெறும்: அன்புமணி ராமதாஸ்
    X

    2026-ல் தமிழ்நாட்டில் அமையும் கூட்டணி ஆட்சியில் பா.ம.க.வும் இடம்பெறும்: அன்புமணி ராமதாஸ்

    • தி.மு.க. 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.
    • அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.

    சென்னை:

    சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று விளையாடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக பேட்மிட்டன் சங்க தலைவராக 7 ஆண்டுகள் இருக்கிறேன். நான் வருவதற்கு முன்பு சிபாரிசு மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் வந்த பிறகு திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெளிப்படையாக வீரர்களின் திறமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இன்று சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தமிழக வீரர்கள் உள்ளனர்.

    தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளது. 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். சென்னையின் நிலைமை மாறவில்லை.

    தி.மு.க. 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.

    அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மருத்துவர்களின் சேவை மக்களை காப்பது தான். சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லா மருத்துவர்களும் நினைப்பார்கள். அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்பது தவறு.

    தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த கூட்டணியில் பா.ம.க. இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×