search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை- திருத்துறைப்பூண்டி அருகே பரபரப்பு
    X

    தற்கொலை செய்து கொண்ட உதய பிரகாஷ்- ஹேமா (பழைய படம்)

    காதல் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை- திருத்துறைப்பூண்டி அருகே பரபரப்பு

    • திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள ஆட்டூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சமரச பாண்டி. இவரது மகன் உதய பிரகாஷ் (வயது 23). இவர் திருத்துறைப்பூண்டியில் வேலை பார்த்து வந்தார். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம், நீடூர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஹேமா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கு ஹேமா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, எதிர்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த ஹேமாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

    இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் காதல் தம்பதி ஆட்டூர் தோப்பு தெருவில் உள்ள உதய பிரகாஷின் உறவினர் வீட்டில் குடியேறினர். மாதங்களும் கடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென உதய பிரகாஷ் எழுந்து பார்த்துள்ளார். அப்போது ஹேமா வீட்டின் அறையில் தூக்கிட்டு பிணமான கிடந்துள்ளார். காதல் மனைவி தூக்கில் கிடந்ததை பார்த்ததும் உதய பிரகாஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    மனைவியின் சடலத்தின் அருகில் கிடந்து அழுது துடித்துள்ளார். இருந்தாலும், ஹேமாவின் இழப்பு உதய பிரகாஷின் மனதில் பேரிடியாக விழுந்திருந்தது. இதனால் மிகவும் மனமுடைந்த உதய பிரகாஷ் வீட்டின் எதிரே உள்ள புளியமரத்தில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

    அவ்வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் செய்து கொண்ட 3 மாதத்தில் காதல் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×