search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை... 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. பிரதீப் ஜான் கணிப்பு
    X

    தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை... 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. பிரதீப் ஜான் கணிப்பு

    • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
    • தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கு அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

    இதனால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×