என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? வேறு கூட்டணியா? - திருமாவளவன் பதில்
- விஜயின் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
- இரு கட்சிகளுக்கு இடையே 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.
த.வெ.க. மாநாட்டில் கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியை வரவேற்று அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுன், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயும் ஒரே மேடையில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் நீடிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு போக வேண்டிய எந்த தேவையும் வி.சி.க.வுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.