search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.3,300 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்- அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்
    X

    ரூ.3,300 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்- அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்

    • தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட நிதி ரூ.3,300 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டிற்கான ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தி உள்ளார்.

    மேலும், "தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1.10 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    2024-25ல் 20 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது.

    மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம் செய்வதால், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது.

    நிதி பெறப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×