என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில்  அதிக மழை பதிவான இடம் இதுதான்
    X

    ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் அதிக மழை பதிவான இடம் இதுதான்

    • கும்மிடிப்பூண்டியில் 22 செ.மீ மழை பெய்துள்ளது
    • திருத்தணி 17 செ.மீ. பெய்துள்ளது

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி பலத்த காற்றுடன் கனமழை வருகிறது. நிலையில் புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையை தவிர்த்து புதுவை, கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    புயல் காரணமாக சென்னை ஆவடியில் அதிகபட்சமாக காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 24 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது .

    கும்மிடிப்பூண்டியில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. திருத்தணியில் 17 செ.மீ., ஜமீன் கொரட்டூரில் 15 செ.மீ., பொன்னேரி, செங்குன்றத்தில் 14 செ.மீ., ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், சோழவரத்தில் 13 செ.மீ., பூண்டியில் 12 செ.மீ., பூவிருந்தவல்லியில் 11 செ.மீ., திருவாலங்காட்டில் 10 செ.மீ., அளவு மழை முறையே பதிவாகி உள்ளது.

    மேலும் சென்னையில் இரவு 8 மணி நிலவரப்படி 553 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அவற்றை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் முறிந்து விழுந்த 99 மரங்கள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் இரவே அகற்றப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×