search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மும்மொழி கொள்கை தேவையற்றது- நடிகர் எஸ்.வி சேகர்
    X

    மும்மொழி கொள்கை தேவையற்றது- நடிகர் எஸ்.வி சேகர்

    • இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
    • இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்லிவிட்டு சென்றார்.

    மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

    இந்நிலையில், இந்தி திணிப்பு குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்லிவிட்டு சென்றார்.

    மும்மொழி கொள்கை தேவையற்றது. அவரவருக்கு பிடித்த மொழியை அவரவர் படிக்கலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×