என் மலர்
தமிழ்நாடு
உ.பி. மகா கும்பமேளாவுக்காக அனுப்பப்பட்ட ரெயில்கள்- தமிழ்நாட்டில் பயணிகள் பாதிப்பு
- தமிழ்நாட்டில் இருந்து தலா 20 பெட்டிகள் கொண்ட 15 ரெயில்கள் வட மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் முக்கிய ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.
உ.பி. கும்பமேளாவுக்காக தமிழ்நாட்டில் இருந்து தலா 20 பெட்டிகள் கொண்ட 15 ரெயில்கள் வட மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் முக்கிய ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - ராமேஸ்வரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டதுடன், தாம்பரம் - திருச்சி, தாம்பரம் - கோவை ரயில்களில் பொதுப்பெட்டிகள் நீக்கத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.
இதனையடுத்து 600 கூடுதல் சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள நிலையில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் செல்வதற்கான கட்டணத்தை தனியார் பேருந்துகள் இரு மடங்காக உயர்த்தியதாக கூறப்படுகிறது.