என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த த.வெ.க. தலைவர் விஜய்
- த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொள்ள முன்கூட்டியே அரங்கிற்கு வந்திருந்த த.வெ.க. தலைவர் விஜய், விழா அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலையுடன் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
Next Story






