என் மலர்
தமிழ்நாடு
உலக கேரம் போட்டியில் வென்ற வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி
- உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்பில் காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்தார்.
- மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழக அரசு எந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரம் சாம்பியன் காசிமாவின் தந்தை தமிழக அரசு தனது மகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்காததில் வருத்தம் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு ரூ. 1 கோடியும் குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சமும் இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ. 50 லட்சமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது..
இந்நிலையில், உலக கேரம் போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி இன்று பரிசுத்தொகையை வழங்கினார்
விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் #திராவிட_மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு… pic.twitter.com/i8NxA7Ry9X
— Udhay (@Udhaystalin) December 18, 2024
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.
அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தங்கை எம்.காசிமா -க்கு ரூ.1 கோடி, தங்கை வி.மித்ரா -க்கு ரூ.50 லட்சம், தங்கை கே.நாகஜோதி -க்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம்.
தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்" என்று பதிவிட்டுள்ளார்.