search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவர் மீது கத்திக்குத்து- கைதான விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம்
    X

    மருத்துவர் மீது கத்திக்குத்து- கைதான விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம்

    • மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தில் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    தனது தாய்க்கு, முறையாக சிகிச்சை அளிக்காதது குறித்து மருத்துவரிடம் கேட்டேன். ஜனவரி மாதம் முதல் தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சைக்கு சென்றேன்.

    என் தாயக்கு கீமோ சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிக்குக்கு சென்றபோது தாயின் உடல் நிலை தேறியது.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒவ்வொறு முறையும் 20 ஆயிரம் வரை செலவானது. மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு மருத்துவர் பாலாஜியிடம் கேட்டேன்.

    அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. மருத்துவர் என்னை திட்டி கீழே தள்ளினார். ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×