search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலையின்மை குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த விஜய் வசந்த்
    X

    வேலையின்மை குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த விஜய் வசந்த்

    • இரயில்வே துறையில் பயிற்சி முடித்து கொண்ட இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதி படுகின்றனர்.
    • பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு விற்று வருவதும் மக்கள் வேலையை இழப்பதற்கு காரணமாக அமைந்தது.

    நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த அவசர நிலை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளேன்.

    இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 7.8℅ மட்டுமே. அரசு வேலை வழங்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வருவோம் என கூறிய போதிலும் கடந்த ஒரு வருட கணக்குகள் வேலையின்மை தீவிரமடைந்துள்ளதை எடுத்து காட்டுகிறது. அரசின் செயல் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளதை இது சுட்டிக் காட்டுகிறது. இரயில்வே துறையில் பயிற்சி முடித்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதி படுகின்றனர்.

    ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற 125 இளைஞர்கள் தங்கள் பணியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு விற்று வருவதும் மக்கள் வேலையை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. அரசு தனது கொள்கைகளை திருத்தி படித்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை கிடைக்க ஆவன செய்ய வேண்டியது மிக அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×