என் மலர்
தமிழ்நாடு
பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி தொடங்கியது
- விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
- பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் அப்படியே பேரணியாக கிளம்பினர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி தொடங்கியது.
காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தேமுதிக தொண்டர்கள் பேரணியை தொடங்கினர்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் அப்படியே பேரணியாக கிளம்பினர்.
கேப்டன் வாழ்க... அரசு ஒழிக... என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக கிளம்பினர்.
கோயம்பேடு பாலம் வழியாக பேரணி செல்லவிருந்த நிலையில் தற்போது அம்பேத்கர் சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாக பேரணி செல்கிறது.