என் மலர்
தமிழ்நாடு

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது - சென்னை ஐகோர்ட்

- சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
- வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யமுடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது
இவ்வழக்கின் விசாரணையில் வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.