என் மலர்
தமிழ்நாடு

X
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் பாஜக குறித்து பேசும்போது மட்டும் பதுங்குவது ஏன்?- பெ.சண்முகம் கேள்வி
By
மாலை மலர்26 Feb 2025 7:04 PM IST

- ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும்.
- பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியதாவது:-
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் மத்திய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?
பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
X