என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![வட பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி- 15 கால்நடைகள் உயிரிழப்பு வட பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி- 15 கால்நடைகள் உயிரிழப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/27/1888431-jk.webp)
X
வட பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி- 15 கால்நடைகள் உயிரிழப்பு
By
மாலை மலர்27 May 2023 11:24 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர்.
- மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களைத் தேடி மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளைத் தவிர்ப்பதற்காகவும் தங்கள் மந்தைகளுடன் இடம்பெயர்கின்றனர்.
அவ்வாறு இடம்பெயர்ந்து காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், 15 கால்நடைகளும் இறந்துள்ளன.
மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
X