search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஈக்வடார் சிறை கலவரம் - கைதிகளுக்கு இடையிலான வன்முறையில் 10 பேர் பலி
    X

    கோப்புப் படம்

    ஈக்வடார் சிறை கலவரம் - கைதிகளுக்கு இடையிலான வன்முறையில் 10 பேர் பலி

    • ஈக்வடாரில் சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • அப்போது நடந்த வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

    குவிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற மோதல்களை தடுக்க சிறைச்சாலைகளில் குழுத் தலைவர்களாக வலம் வரும் நபர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி ஈக்வடார் தலைநகர் குவிட்டோவில் உள்ள இன்கா சிறைச்சாலையில் இருந்து 3 முக்கிய கேங் லீடர்களை வேறு சிறைக்கு மாற்றும் பணி நடைபெற்றது.

    இந்நிலையில், கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×