search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    காசாவில் போர் தொடங்கியதில் இருந்து 3-இல் 2 கட்டிடங்கள் சேதம்: ஐ.நா. தகவல்
    X

    காசாவில் போர் தொடங்கியதில் இருந்து 3-இல் 2 கட்டிடங்கள் சேதம்: ஐ.நா. தகவல்

    • தெளிவான புகைப்படங்களை கொண்டு இந்த தகவல் கிடைக்கப்பெற்றது.
    • இந்த புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என ஐ.நா. தெரிவித்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம் காசா போர் துவங்கியதில் இருந்து அந்தப் பகுதியில் இருந்த மூன்றில் இரண்டு கட்டிடங்கள் பகுதியாக சேதமடைந்து, அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. சபை அறிவித்து இருக்கிறது.

    சேத மதிப்பீட்டை புதுப்பித்தும், ஐ.நா. செயற்கைக்கோள் மையம் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலக்கட்டங்களில் சேகரிக்கப்பட்ட அதிக தெளிவான புகைப்படங்களை கொண்டு இந்த தகவல் கிடைக்கப்பெற்றது.

    அதன்படி, "காசா பகுதியில் உள்ள மொத்த கட்டமைப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி சேதம் அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. காசா பகுதியில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களில் 66 சதவிகிதம் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 778 கட்டமைப்புகளை கொண்டிருக்கிறது."


    "இதில் 52 ஆயிரத்து 564 கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன, 18 ஆயிரத்து 913 கட்டிடங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. 35 ஆயிரத்து 591 கட்டிடங்களில் கிட்டத்தட்ட சேதமடைந்துள்ளன. 56 ஆயிரத்து 710 அமைப்புகளில் மிதமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன" என்று ஐ.நா. செயற்கைக்கோள் மையம் தெரிவித்தது.

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் நடத்திய முன்னறிவிப்பு இல்லாத அக்டோபர் 7 தாக்குதலின் விளைவாக 1,205 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் மற்றும் சிறைப் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.

    இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் காசாவில் குறைந்தது 41 ஆயிரத்து 615 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என ஐ.நா. தெரிவித்தது.

    Next Story
    ×