என் மலர்
உலகம்

டிரம்ப் ரிசார்ட் மீது அத்துமீறி பறந்த விமானங்களால் பரபரப்பு

- எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தின.
- விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோ ரிசார்ட்டுக்கு மேலே மூன்று பயணிகள் விமானங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது, இதனால் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு துறையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் சோதனை பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது குறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள தகவல்களில், எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தி, மூன்று பயணிகள் விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பாம் பீச் வான்வெளியில் ஏன் பறந்தன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
பாம் பீச் போஸ்ட் எனும் உள்ளூர் வலைதளம் வெளியிட்டுள்ள தகவல்களில், மார்-எ-லாகோவிற்கு டிரம்ப் வந்திருந்த போது அந்த இடத்தின் மீது மூன்று முறை வான்வெளி விதிமீறல்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரண்டு முறையும், பிப்ரவரி 17-ம் தேதி ஒருமுறையும் விதிமீறல்கள் நடந்துள்ளன.
வான்வெளி விதிமீறல்களுக்கு எஃப்-16 போர் விமானங்கள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 18-ம் தேதி பாம் பீச்சிற்குள் மற்றொரு பயணிகள் விமானம் பறந்ததாகவும் கூறப்படுகிறது. போர் விமானங்கள் "பாதுகாப்புக்கு உட்பட்டு பயன்படுத்தப்படும். இவை விரைவாக, தரையில் உள்ள மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது."
எஃப்-16 ரக போர் விமானங்கள் விமானத்தை வான்வெளியில் இருந்து வெளியேற்றிய பிறகு டிரம்ப் தனது ரிசார்ட்டை சென்றடைந்தார்.