என் மலர்
உலகம்
வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது மீண்டும் தாக்குதல்
- தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
- இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
வங்காளதேசத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளன. கோவில்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பீல்தோரா, ஷாகுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து கோவில்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக, பொலஷ்கந்தா கிராமத்தை சேர்ந்த அலல் உதின் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வங்காளதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
அதன்பின் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இடைக்கால அரசு தெரிவித்தது. ஆனாலும் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.