என் மலர்
உலகம்

ஆப்கானிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு- 3 பேர் பலி
- ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று குண்டு வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது சமீபத்திய மாதங்களில் நகர்ப்புற மையங்களில் நடந்த பல பெரிய தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






