search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் புயலில் சிக்கி 4 பேர்  பலி.. சூறைக்காற்றில் தரைமட்டமான கட்டடங்கள் (வீடியோ)
    X

    அமெரிக்காவில் புயலில் சிக்கி 4 பேர் பலி.. சூறைக்காற்றில் தரைமட்டமான கட்டடங்கள் (வீடியோ)

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.

    நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    Next Story
    ×