search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த 46 பேர்.. பாகிஸ்தானின் பல்வேறு இடங்கள் மீது தாலிபான் தாக்குதல்..
    X

    ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த 46 பேர்.. பாகிஸ்தானின் பல்வேறு இடங்கள் மீது தாலிபான் தாக்குதல்..

    • தீய சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் மையங்கள் தாக்கப்பட்ட்டன
    • 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வரையப்பட்ட எல்லைக் கோடான டுராண்ட் கோட்டை ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக நிராகரித்து வருகிறது.

    ஆப்கானிஸ்தான் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் உள்ள பயிற்சி நிலையத்தை குறிவைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் வந்துள்ளன.

    தாலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த [செவ்வாய்க்கிழமை] வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தென்கிழக்கு எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள 7 கிராமங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்கள் மீது ஆப்கனிஸ்தான் தாலிபான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களை குறிவைத்து தாக்கியதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது,

    ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு பகுதிகள் மீது தாக்குதல்களை ஏற்பாடு செய்த தீய சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் மையங்கள் மற்றும் மறைவிடங்களில் உள்ளிட்ட பல நிலைகள் முதல் எல்லை அனுமான கொடு வரை பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது என தாலிபான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

    இந்த அறிக்கை பாகிஸ்தானைக் குறிப்பிடுகிறதா என்று கேட்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தான் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எனயதுல்லா கோவராஸ்மி, ஆப்கானிஸ்தான் அந்த நிலப்பரப்பை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

    19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் வரையப்பட்ட எல்லைக் கோடான டுராண்ட் கோட்டை ஆப்கானிஸ்தான் நீண்ட காலமாக நிராகரித்து வருகிறது. இந்த எல்லைக்கோடு ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு மலை மற்றும் அரசு ஆதிக்கம் இல்லாத பழங்குடிப் பகுதி வழியாக செல்கிறது.

    Next Story
    ×