என் மலர்
உலகம்
X
சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல்: 67 பேர் பலி
Byமாலை மலர்26 Jan 2025 4:46 AM IST
- மருத்துவமனை மீது டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
- இந்த தாக்குதலில் 67 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
போர்ட் சூடான்:
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 67 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
X