என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
சாதனை படைக்க வயது தடையல்ல... `புஷ்-அப்' செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி
- ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப் செய்து கின்னஸ் சாதனை.
- டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
சாதனை படைக்க வயது தடையல்ல என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் மூதாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கனடாவை சேர்ந்தவர் டோனாஜீன் வையில்டின். 59 வயதான இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.
ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற நிபந்தனைகளுடன் டோனாஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவர் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாகவே செய்து தனது சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், `நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கூறுகையில், எங்களின் பாட்டி மிகவும் அற்புதமானவர் என்றனர்.