search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாராளுமன்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார் எலான் மஸ்க்: ஜெர்மனி குற்றச்சாட்டு
    X

    பாராளுமன்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார் எலான் மஸ்க்: ஜெர்மனி குற்றச்சாட்டு

    • AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
    • எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை.

    அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உதவி புரிந்தார். வெளிப்படையாக பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் மில்லியன் கணக்கில் தேர்தல் நிதி அளித்தார். இதனால் டொனால்டு டிரம்ப் அவரை முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளார்.

    இந்த நிலையில் ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார் என ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளார்.

    எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் "AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஜெர்மனி செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பை மேற்கொள்காட்டி தனது கருத்தை இரட்டிப்பாக்கினார்.

    இந்த நிலையில் ஜெர்மன் அரசு செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் "இதன் உண்மை என்னவெனில், எலான் மஸ்க் பாராளுமன்ற தேர்தலில் ஆதிககம் செலுத்த முயற்சி செய்தி கொண்டிருக்கிறார். ஜெர்மனியில் தேர்தல் வாக்காளர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்தும் வாக்குகளால் முடிவு செய்யப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் தேர்தல் ஜெர்மன் விவகாரத்தைச் சேர்ந்தது. எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனி கடந்த மாதம் ஒலாஃப் ஸ்கால்ஸின் அரசு வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி 23-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×