என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இந்தியா-இலங்கை படகு போக்குவரத்து தொடங்க தாமதம் ஏன்? இலங்கை மந்திரி விளக்கம்
- படகு போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு:
இந்தியா-இலங்கை இடையிலான படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் போக்குவரத்து தொடங்கவில்லை.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் படகு போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.
"இந்தியாவுடன் படகு போக்குவரத்தை தொடங்க இலங்கை தயாராக உள்ளது. ஆனால் படகு சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தை மாற்றுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக நாகப்பட்டினம் துறைமுகத்தை தேர்வு செய்துள்ள இந்திய அதிகாரிகள், அங்கு வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர்" என இலங்கை மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.