search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரேசிலில் அதிபரை கொன்று ஆட்சியை கவிழ்க்க சதி-  ராணுவ அதிகாரிகள் 5 பேர் கைது
    X

    அதிபர் லுலா டி சில்வா

    பிரேசிலில் அதிபரை கொன்று ஆட்சியை கவிழ்க்க சதி- ராணுவ அதிகாரிகள் 5 பேர் கைது

    • ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    பிரேசிலியா:

    பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி அதிபரான ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அரசு அமைந்தது.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் அதிபர் லுலா டி சில்வா தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும் சதி நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் டி சில்வா, துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரை படுகொலை செய்யவும் சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×