search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கனடா ஜனநாயகத்திற்கு 2-வது பெரிய அச்சுறுத்தல் இந்தியா: ஜஸ்டின் ட்ரூடோ
    X

    கனடா ஜனநாயகத்திற்கு 2-வது பெரிய அச்சுறுத்தல் இந்தியா: ஜஸ்டின் ட்ரூடோ

    • கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.

    ஒட்டாவா:

    கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தலாக உள்ளது. அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2-வது இடத்தில் இருந்த ரஷியா 3-வது இடத்திற்குச் சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×