search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    என்னோட உடம்பு  இந்த கம்பெனிக்கு தான்.. CEO லீவு எடுத்துக்க சொல்லியும் சின்சியராக மறுத்த ஊழியர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    'என்னோட உடம்பு இந்த கம்பெனிக்கு தான்'.. CEO லீவு எடுத்துக்க சொல்லியும் சின்சியராக மறுத்த ஊழியர்

    • பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் ஒரு ஊழியர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
    • இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது.

    இந்தியர்கள் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் விஸ்வாசத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பரவி இருக்கின்றனர். வெளிநாட்டு முதலாளிகள் விரும்பிக் வேலைக்கு சேர்ப்பது இந்தியாவில் தயாரான பட்டதாரிகளையே என்ற அளவுக்கு நிலைமை இருக்கும் சூழலில் அதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்யும் இந்திய ஊழியர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் அந்த ஊழியருக்கு மெசேஜ் செய்த அவர், 'நீங்கள் வெகு நாட்களாக விடுப்பு எடுக்காமல் வேலை செய்வதாக நான் அறிந்தேன். எனவே நீங்கள் நிச்சயம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த அந்த ஊழியர், 'எனக்கு விடுப்பு வேண்டாம் சார், நமது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய எனது உடல் படகாக செயல்படும்' என்று கூறி சிஇஓவை பூரிக்க வைத்துள்ளார். ஊழியரின் கடமை உணர்ச்சியை எண்ணி மனம் நெகிழ்ந்த சிஇஓ, அவர்களின் இந்த உரையாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய இன்ஜினியர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கமன்ட் செக்சனில் குவித்து வருகின்றனர்.

    Next Story
    ×