என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: இளவரசர் ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம்
- மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் (வயது 73) மன்னராக அறிவிக்கப்பட்டார்.
அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6-ந்தேதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் அரச குடும்பத்தினரில் 10-வது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி, தனது மனைவி மேகன், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிசூட்டு விழா 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.