search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கியூபாவில் மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் சிக்கித் தவிக்கும் மக்கள்
    X

    கியூபாவில் மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் சிக்கித் தவிக்கும் மக்கள்

    • கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் அன்டோனியோ குட்டரெஸ்.
    • இந்த நிலையம் சேதமடைந்ததால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.

    ஹவானா:

    தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் செயல்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து, அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான அன்டோனியோ குட்டோரஸ், தன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.

    சமீபத்தில் வீசிய மில்டன் சூறாவளி காரணத்தால் குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டதால், போக்குவரத்து சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.

    கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயலிழந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின. இணையதள சேவையும் பாதிக்கப்பட்டதால், கியூபா மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இரவில் செயல்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கலாசார மையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    தலைநகர் ஹவானாவில் அனைத்து வர்த்தகங்களும் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டன. உணவு, எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மின் தடை அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

    Next Story
    ×