search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    இமயமலையில் கண்டுபிடித்த பாம்பு இனத்துக்கு டைட்டானிக் நாயகனின் பெயர்.. ஏன் தெரியுமா?
    X

    இமயமலையில் கண்டுபிடித்த பாம்பு இனத்துக்கு 'டைட்டானிக்' நாயகனின் பெயர்.. ஏன் தெரியுமா?

    • இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர்.
    • வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது.

    இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவிட சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அரிய பம்பை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    இதனைத்தொடர்ந்து இது பேசுபொருளாக நிலையில் இதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன்படி இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர். நேபாள் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவி உள்ளதாக கண்டறியப்பட்ட பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் [Anguiculus dicaprioi] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற லியார்னர்டோ டி காப்ரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக அவரது பெயரை இந்த பாம்பு இனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.

    இதைத்தவிர்த்து சிக்கிம் பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் ராப்பி [Anguiculus rappii] என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை பாம்புகள் வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது. அதிலும் ஆங்குய்குலஸ் ராப்பி அரிதினும் அரிதாகவே தென்படக்கூடியதாக உள்ளது.

    Next Story
    ×